சார்பட்டா பரம்பரை படத்தில், நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்ட முன்னணி நடிகர்.. அதுவும் எந்த கதாபாத்திரம் தெரியுமா
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து, பசுபதி, கலையரசன், John Kokken, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று அமேசான் பிரைமில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
அந்த வகையில் பசுபதி நடித்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நின்று விட்டது.
இந்நிலையில், இந்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, நடிகர் சத்யராஜ் தானாம்.
அப்போது, பல படங்களில் அவர் பிசியாக இருந்ததால், இந்த கதாபாத்திரத்தில் அவரால், நடிக்கமுடியாமல் போய்விட்டது என்று தெரிவிக்கின்றனர்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri