மீண்டும் ஓடிடி-யில் டாப் நடிகரின் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ott mohanlal jeethu joseph 12 man
By Kathick Oct 05, 2021 11:00 AM GMT
Report

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரிஷ்யம் 2 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், இப்படம் திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ள படம் ‘12த் மேன்’.

இந்நிலையில், திரிஷ்யம் 2 படத்தை போல், இப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US