நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம்.. ரசிகர்கள் அப்செட்
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
ஆனால் மீண்டும் திரையரங்கள் திறக்கபட்டிருந்தாலும், தொடர்ந்து திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில், நெற்றிக்கண், அன்பெல் சேதுபதி, துக்ளக் தர்பார், லிப்ட், போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
அந்த வரிசையில் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம், வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்கில் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்து கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை பிரபல Letsottglobal நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
NOVEMBER 3 release plan. pic.twitter.com/pLYOozaL6S
— LetsOTT GLOBAL (@LetsOTT) September 30, 2021
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri