அருண் விஜய் - ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.

hari arun vijay samuthirakani prakash raj av33
By Kathick Aug 27, 2021 08:40 AM GMT
Report

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

#AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு நான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுகிறேன்.

நாம் அடுத்த படத்தில் இணைவோம் என்று பிரகாஷ் ராஜ் கூறியதை தொடர்ந்து, எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சமுத்திரகனி நடித்து வருகிறார். அருண் விஜய், ப்ரியா பவானிசங்கர், சமுத்திரகனி மற்றும் பெரும் நடசத்திரங்கள் பங்கேற்க “AV33” படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பழனியெய் தொடர்ந்து படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடரும். நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த, குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

அருண் விஜய் - ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார். | Popular Actors Replaces Prakash Raj In Av33


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US