நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் விருது தரவேண்டும்.. பிரபல நடிகர் பேட்டி

suriya soorarai potru kicha sudeep oscar award
By Kathick Jul 27, 2021 05:40 AM GMT
Report

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்தநிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்திய பேட்டியில் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.

அவர் கூறியதாவது :

" சூரரை போற்று படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர்.

அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு படத்தை பார்ப்பதும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது.

இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிக்க அவர் முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கிச்சா சுதீப், இருவரும் இணைந்து ரத்தசரித்திரம் படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US