பிரபல முன்னணி நடிகையின் 25 வது படம் நேரடியாக டிவியில் ரிலீஸ்.. ரசிகர்கள் அப்செட்
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில்,வரிசையாக பல புதுப் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது.
மேலும் அதேபோல் சில திரைப்படங்கள் நேரடியாக டி.வி.யிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆம், நாங்க ரொம்ப பிஸி, மண்டேலா, புலிக்குத்தி பாண்டி, ஏலே, வெள்ளை யானை, வணக்கம்டா மாப்ள ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன.
அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட உள்ளதாம்.
இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.