'நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவர் பிரபாஸ்' - பிரபல 33 வயது நடிகை புகழாரம்
பிரபாஸ்
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளிவந்து, வசூலில் ஹிமாலய சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி.

இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு கொடுத்த விருந்தோம்பல் மற்றும் பிரபாஸ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
தமன்னா புகழாரம்
தமன்னா கூறுகையில் ' பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது. உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் 30க்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்'.

'இது விருந்தினர் மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவர் பிரபாஸ் என்று சொல்லலாம்.' என கூறியுள்ளார் நடிகை தமன்னா.
தனுஷ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா