சாய் பல்லவி நல்ல நடிகை தான், ஆனால் ராமாயணா படத்தில் சீதையாக?... பிரபல நடிகை விமர்சனம்
ராமாயணா
Ramayana: ராமாயணா, இந்திய சினிமாவில் அண்மையில் வெளியான ஒரு பிரம்மாண்ட படம்.
என்ன கதை, ராமர்-சீதாவின் அழகிய காதல் கதையும், ராவணன் என்பவர் அழிந்த கதையையும் சொல்லும் ஒரு இதிகாச கதையை தழுவிய படம் தான் ராமாயணா.
இந்த கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், தொடர்கள் வந்தாலும் சலிக்காமல் மக்கள் இன்னமும் படத்தை கொண்டாடுகிறார்கள்.

இயக்கம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிக்க இப்படம் கடந்த நவம்பர் 5ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது.
இந்த முதல் பகுதிற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தனர்.

நடிகை விமர்சனம்
படம் வெளியானது, மக்கள் படத்தின் மேக்கிங், VFX, நடிகர்களின் நடிப்பு போன்ற விஷயங்கள் குறித்து விமர்சனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தனிஷா முகர்ஜி படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவி குறித்து பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், சாய் பல்லவி சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சீதை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகத் தெரியவில்லை. அவரது தோற்றம் கதாபாத்திரத்துடன் தன்னை ஒன்றிணைய விடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமண மேடையில் கைவிட்ட மணமகன்..இப்போது எனக்கு கணவர் கிடைத்துவிட்டார் - பிரித்தானியப் பெண் News Lankasri