விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அட இவரா! யாருனு பாருங்க
துருவ் விக்ரம்
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து தனது தந்தையின் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இதன்பின் துருவ் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை. கபடி போட்டியை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இப்படத்திற்காக கபடி பயிற்சியை எடுத்து வருகிறார் துருவ் விக்ரம்.
மாமன்னன் படத்தை தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் வாழை எனும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் எடுத்துள்ளார். இதன்பின் தற்போது துருவ் விக்ரம் படத்தை இயக்க தயாராகி வரும் நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோயின் அப்டேட்
அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகை தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் மலையாளத்தில் வெளிவந்த ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே போன்ற திரைப்படங்களிலும், தமிழில் வெளிவந்த கவண் மற்றும் இரும்பு திரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
