கிளாமர் நடிகை புவனேஸ்வரியை நியாபகம் இருக்கா?.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
புவனேஸ்வரி
தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளை எப்போதும் மறக்கவே முடியாது. அப்படி கிளாமர் ரோல்களில் நடித்த நடிகைகளை மறந்திருப்பார்களா என்ன?
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் பெரிய ரீச் பெற்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து வந்தவர் தான் புவனேஸ்வரி.
இப்படத்திற்கு முன் கந்தா கடம்பா கதிர்வேலா, ப்ரியமானவளே, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சின்னத்திரையில் கோகுலம் வீடு, சித்தி, சொர்க்கம், ராஜ ராஜேஸ்வரி போன்ற தொடர்களிலும் நடித்தார். ஆனால் இவருக்க ரீச் கொடுத்தது பாய்ஸ் படம் தான்.
இவர் 18 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கினார், அதாவது அவர் விபச்சாரம் செய்வதாக பிரச்சனை எழுந்தது.
இந்த பிரச்சனைக்கு பிறகு சுத்தமாக புவனேஸ்வரி சினிமாவில் இருந்து விலகினார்.
நடிகை பேட்டி
சினிமாவில் இருந்த போது எழுந்த சர்ச்சையால் அந்த துறையில் இருந்து விலகிய புவனேஸ்வரி தற்போது ஆன்மீக வழியில் பயணித்து வருகிறாராம்.
அந்த பேட்டியில் அவர், என்னை ரசிகர்கள் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பார்த்திருப்பார்கள், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தேன்.
நான் இப்போது இருப்பது ஆன்மீக பாதையில் உள்ளேன், நடித்துக் கொண்டிருந்தபோதே ஆன்மீகத்தில்தான் இருந்தேன்.
இப்போது நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கியிருக்கிறேன், நான் இந்த ஆன்மீக பாதைக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன என கூறியுள்ளார்.