லிங்குசாமி படத்தில் அஜித், விஜய் பட நடிகை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

lingusamy akshara gowda
By Kathick Aug 02, 2021 12:30 AM GMT
Report

தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.

இதன்பின் ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர், தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US