ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யார் தெரியுமா?
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம், ஜீ தமிழில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் முக்கிய சீரியல்.
இப்போது சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இப்போது மீனாட்சி யார் உண்மை ரேவதி மற்றும் கார்த்திக்கு தெரிய வருமா என்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

மீனாட்சி தனது கணவருக்கு திதி கொடுக்க வர அதே கோவிலுக்கு கார்த்திக் மற்றும் ரேவதியும் வருகிறார்கள். ஆனால் அங்கு யாருக்கும் மீனாட்சி பற்றி தெரியவரவில்லை. ரேவதி வீட்டிற்க்கு வந்து சுமங்கலி பூஜை குறித்து சொல்கிறாள்.
அடுத்து கார்த்திக் 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி கொள்கிறான். அடுத்து கதையில் என்ன திருப்பங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
நியூ என்ட்ரி
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் கார்த்திகை தீபம் சீரியலில் வரப்போகும் நியூ என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது நடிகை சுதா சந்திரன் அமைச்சராக சீரியலில் வருகிறாராம், அவரது என்ட்ரியால் கதையில் நிறைய பரபரப்பான காட்சிகள் இடம்பெறவுள்ளன.