மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து முதல் தோல்வியை சந்தித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா..?
மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் வாரணாசி படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்க பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவை நடந்த ரூ. 25 கோடி செலவு செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும், வாரணாசி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1200 கோடி என்கின்றனர்.
திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டிருப்பார்கள். அதுகுறித்து பேட்டிகளிலும் பகிர்ந்துகொள்வார்கள்.
பிரபல நடிகை பேட்டி
இந்த நிலையில், தனது முதல் தோல்வி மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த படம்தான் என பிரபல நடிகை கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, நடிகை ரகுல் ப்ரீத் சிங்தான்.

அவர் கூறியதாவது: கஜினி, துப்பாக்கி போன்ற ஹிட் திரைப்படங்களை தந்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க கிடைத்தபோது அதை மிகவும் பெரிதாக நினைத்தேன். ஆனால், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து எனக்கு முக்கியமான பாடமாக அமைந்தது. டோலிவுட்டில் தொடர்ந்து 8 ஹிட் படங்கள் வந்த நிலையில், இவ்வளவு பெரிய வாய்ப்பு தோல்வியானது, சினிமாவில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை என்பதை உணர வைத்தது" என கூறியுள்ளார்.