விடாமுயற்சி பட வாய்ப்பை இழந்த முன்னணி நடிகை.. அவருக்கு பதில் இவர் நடிக்கிறாரா? யார் தெரியுமா
விடாமுயற்சி
கடந்த சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் துவங்கியது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

அஜித் முதல் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.
ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, விடாமுயற்சி படத்திலிருந்து பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி விலகிவிட்டாராம்.
அவருக்கு பதில் இவர்
இந்நிலையில், ஹுமா குரேஷி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இவர் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்திலிருந்து விலகிய நடிகை ஹுமா குரேஷி ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri