தனுஷுக்கு ஜோடியும் 2 பிரபல நடிகைகள்.. யார் யார் தெரியுமா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாறன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘டி44’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில்இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
ஹன்சிகா ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மற்ற 2 கதாநாயகிகள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ராஷி கண்ணா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan