இந்தியன் 2 படத்தில் விலகிய முக்கிய நபர்.. அதிர்ச்சியில் படக்குழு
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக முடங்கியது.
ஆனால், தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது இந்தியன் 2 படத்திலிருந்து விலகியுள்ளாராம்.
இதற்கு காரணம் அவர், கர்ப்பமாக இருப்பது தான் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இதனால் ஷாக்கான படக்குழு தற்போது காஜலுக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.