ராஜா ராணி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லியோ பட நடிகை.. இப்போ ஃபீல் பண்ணி என்ன ஆகப்போகுது
ராஜா ராணி
அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் காப்பியடித்து எடுக்கப்பட்டது என கூறி சில சர்ச்சைகள் எழுந்தாலும், மாபெரும் வெற்றியை இப்படம் பெற்று அனைத்து சர்ச்சைக்கும் பதிலடி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பை தவறவிட்ட நடிகை
இந்த நிலையில், ராஜா ராணி மிகவும் க்யூட்டான கதாபாத்திரம் நஸ்ரியா நடித்த கீர்த்தனா ரோல் தான். ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது நஸ்ரியா கிடையாதாம்.
பிரபல நடிகை பிரியா ஆனந்த் தான் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தாராம். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம். பின் இப்படத்தின் வெற்றியை பார்த்த பிரியா ஆனந்த் பீல் பண்ணினார் என கூறப்படுகிறது.

ஷாஜகான் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. கணவர், பிள்ளையுடன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை பிரியா ஆனந்த் கடைசியாக தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
