பாகுபலி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. ராஜமௌலி நினைத்திருந்தது இந்த நடிகையை தானாம்
பாகுபலி
இந்தியளவில் இயக்குனர் ராஜமௌலியை கொண்டு சேர்த்த திரைப்படம் பாகுபலி. பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் பாகம் ரூ. 600 கோடி வரை வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் அதைவிட மூன்று மடங்கு வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
முதலில் நடிக்கவிருந்த நடிகை
இப்படத்தின் மூலம் வரவேற்பை பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்து ராஜமாதா சிவகாமி தேவி. அதுவும் அவர் 'மகேந்திர பாகுபலி' என கூறும் போது மொத்த திரையரங்கமும் அதிர்ந்துபோனது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ராஜமாதா சிவகாமி தேவியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன் கிடையாதாம்.
இயக்குனர் ராஜமௌலி நடிகை ஸ்ரீதேவியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் ஸ்ரீதேவியால் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் ரம்யா கிருஷ்ணனை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளனர். இப்படி தான் ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.