ரஜினி, கமல், அஜித்துடன் நடிக்காத ஒரே முன்னணி தமிழ் நடிகை.. யார் தெரியுமா
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள், ரஜினி, கமல் மற்றும் அஜித்.
இந்த மூவரும் இதுவரை பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், இதுவரை ரஜினி, கமல் மற்றும் அஜித்துடன் இணைந்து பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை, முன்னணி நடிகை சமந்தா தான். ஆம், நடிகை சமந்தா இதுவரை ரஜினி, கமல் மற்றும் அஜித்துடன் இணைந்து நடிக்கவே இல்லை.
இவர்களை தவிர்த்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும், விஜய், சூர்யா, தனுஷுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.
அதிலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் என மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.