அஜித் படத்தில் நடிக்க மறுத்து முன்னணி நடிகை.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளிவந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அப்படி, அஜித்தின் மாஸ் கலந்த கிளாசான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்த படம் என்னை அறிந்தால்.
கௌதம் மேனன் இயக்கியிருந்த இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா 'ஹேமானிகா' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது முன்னணி நடிகை சமந்தா தானாம். முதலில் ஒப்புக்கொண்ட சமந்தா, பின்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.
இதன்பின், இயக்குனர் கௌதம் மேனன், 'ஹேமானிகா' கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவை தேர்ந்தெடுத்தாக தகவல் தெரிவிக்கின்றனர்.