இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய காஜல் அகர்வால்..? அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி நடிகை
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக முடங்கியது.
மேலும், தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.
ஆனால், இப்படத்திலிருந்து நடிகை காஜல் அகர்வால் தீடீரென விலகியுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு, காஜல் கர்ப்பமாக இருப்பது தான், காரணம் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், காஜல் அகர்வால் நடித்து வந்த கதாபாத்திரத்தில், நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டும் உறுதியானால், இந்தியன் 2 படத்தின் மூலம், மூன்றாவது முறையாக கமல் ஹாசனுடன் இணைக்கிறார் நடிகை திரிஷா.
ஆம், இதற்கு முன் மன் மதன் அம்பு மற்றும் தூங்காவனம் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.