நடிகர் விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. பிரபல நடிகையின் மகனா

Kathick
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். தன்னுடைய சினிமா பயணத்தில் மீதமுள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்குவேன் என தெரிவித்துள்ளார்.
Goat படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அவருடைய கடைசி படம் தளபதி 69 குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், பிரபல நடிகையின் மகன், நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி தான். ஆம், தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவர் வனிதா. இவருடைய மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. விஜய்யின் மடியில் அமர்ந்து ஸ்ரீ ஹரி விளையாடும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது.