அவரை போல் ஒழுக்கமான மனிதரை பார்த்ததே இல்லை! முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய 29 வயது நடிகை
முதலமைச்சர் விஜய்
நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு பெரிய வெற்றி மாபெரும் வரலாற்றை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் வெற்றி குறித்து திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பகிர்ந்துகொண்டனர்.
மீனாட்சி சவுத்ரி
அந்த வகையில், இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி பேட்டி ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், "விஜய் அவர்களைப் போல் ஒரு ஒழுக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை. காலை 7 மணி ஷாட் என்றால், சரியாக 7 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார்; பிறரின் நேரத்தை மதிப்பவர். நம்மோடு பணிபுரிந்த ஒருவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது; அவர் வரலாறு படைத்து வருகிறார்" என கூறியுள்ளார்.

நடிகை மீனாட்சி சவுத்ரி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri