இந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன்.. அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன்.
சைக்கோ திரில்லர் கதைக்களம் கொண்டு உருவான இப்படத்தை, ராம்குமார் இயக்கி இருந்தார்.
தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. அதன்படி ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்தியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அமலா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri