தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தளபதி 66
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. வம்சி இப்படத்தை இயக்குகிறார்.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா
இந்நிலையில், அதற்கு விடையளிக்கும் வகையில் இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகை ஜெயசுதா நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகை ஜெயசுதா ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளிவந்த தோழா படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
A very warm welcome to @JSKapoor1234 Ma’am on joining Team #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/FKELOkrnCB
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022