லியோ படத்தில் இணைந்த மற்றும் ஒரு நடிகை.. அட இவரா? எதிர்பார்க்காத ஒருவர்
லியோ
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் க்லிம்ஸ் வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.
அட இவரா
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை மடோனா சபாஸ்டியன் தான்.
ஆம், பிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை மடோனா சபாஸ்டியன் லியோ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
மடோனா சபாஸ்டியன் தமிழில் வெளிவந்த ஜூங்கா, காதலும் கடந்து போகும், கவண், பா. பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முதலாக ரூ 1 கோடி வாங்கிய தென்னிந்திய நடிகர் யார் தெரியுமா? உள்ளே பாருங்கா!