பல வருடத்திற்கு முன் மிர்ச்சி செந்தில், மாகாபா, டிடி, பாவனா, ரம்யா, தீபக், ஜெகன், கிகி எடுத்துக்கொண்ட சூப்பர் போட்டோ- Throwback
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கே பெயர் போன ஒரு டிவி.
தொலைக்காட்சி ஆரம்பித்தது முதல் இப்போது வரை லட்சக்கணக்கான தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கும். அப்படி விஜய் டிவியில் எடுத்துக் கொண்டால் இதில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஏராளம்.
அதிலும் 90களில் விதவிதமான நிகழ்ச்சிகள் வர இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
பாடல், நடனம், விளையாட்டு என நிறைய வந்தன, அப்படி Home Sweet Home என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி இருந்தது. இதில் டிடி மற்றும் தீபக் தொகுப்பாளர்களாக இருந்தார்கள்.
தற்போது இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதாவது தொகுப்பாளர்களான டிடி, தீபக், மிர்ச்சி செந்தில், ரம்யா, பாவனா, ஜெகன், கிகி என அனைவரும் ஒரு புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
பல வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டதா எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.