வெப் சீரிஸில் களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம்.. அதுவும் விஜய் பட நடிகையுடன்

web series bigg boss kavin reba monica john
By Kathick Aug 03, 2021 03:50 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், தமிழ் திரையுலகில் பலர் பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் தற்போது 'லிப்ட்' எனும் திரைப்படம் உருவாகி, வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.

இப்படத்தில் அமிர்தா அய்யர் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கவின், ஒரு நடிகராக மட்டுமல்லாமல், டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கவின் புதிதாக வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த, நடிகை ரெபா மோனிகா ஜான் நடிக்கவுள்ளார்.

இந்த வெப் சீரிஸை, அட்லீயின் உதவி இயக்குனர் ஈநாக் அபில் என்பவர் இயக்கவுள்ளாராம். இதுவே இவரது அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப் சீரிஸில் களமிறங்கும் பிக் பாஸ் பிரபலம்.. அதுவும் விஜய் பட நடிகையுடன் | Popular Big Boss Contestent Act With Bigil Actress


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US