டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் இளம் பிக் பாஸ் நடிகை.. காரணம் இதுதானா
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
புகைப்படங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது நடன வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

இந்நிலையில் தற்போது திடீரென #ShivaniNarayanan என்ற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன், தற்போது 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.
அதன் காரணமாகவே தற்போது ஷிவானி நாராயணனின் ஹாஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.