இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை சந்தித்த மற்றொரு பிக் பாஸ் பிரபலம்.. யாருனு நீங்களே பாருங்க
நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி.
இதன்பின் தமிழில் வெளிவந்த ஜில்லா, மரியான், பூஜை, கயல் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு 60 நாட்களை கடந்து போட்டியிட்டு வருகிறார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதில் ஒருவர் தான், ராப் பாடகி ஜக்கி பெரி. இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ஜக்கி பெரி, இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அங்கு இமான் அண்ணாச்சியின் மகள், மனைவி என அனைவருடனும் சேர்ந்து உணவும் சாப்பிட்டுள்ளார்.
இவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..