பாவனியை எனக்கு சுத்தமா புடிக்காது.. அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் சீசன் 5வில் பெரும் சர்ச்சைக்குள்ளான விஷயம் பாவனி, அபினை காதலிக்கிறார்கள் என்று பேசப்பட்டது தான்.
இதனை கேள்வி கேட்டு ஆரம்பித்து வைத்தது ராஜு என்றாலும், கடைசியில் குறும் படம் பார்க்கும் பொழுது பாவனியும் அதேயே உணர்ந்திருக்கிறார் என்று தெரியவந்தது.
இந்த விஷயத்திற்கு பிறகு பாவனி மற்றும் ராஜு இருவரும் எப்போது எதிர் எதிர் துருவங்கள் போல் தான் தெரிந்தார்கள்.
இதன்பின், பாவனி மற்றும் அமீர் இருவரும் காதலித்து வருவதாக நிகழ்ச்சியை பார்த்த பலரும் கூறினார்கள். ஆனால், நாங்கள் காதலிக்கவில்லை என்று இருவரும் கூறிவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற டுவிட்டர் ஸ்பேஸில், கலந்து கொண்ட ராஜுவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், பேசிக்கொண்டிருந்த ராஜு, தனக்கு பாவனியை பிடிக்காது என்று அதிரடியாக கூறியுள்ளார்.
ராஜு இப்படி கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.