சிம்புக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை - 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது.
இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன்னிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri