லியோ படத்தில் பயன்படுத்தும் கேமரா இதுதான்.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த வீடியோ
லியோ
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த அறிவிப்பு வீடியோ மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக இப்படத்தின் First லுக் போஸ்டருக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் இயக்குனர் மிஸ்கின் காட்சிகள் நிறைவுபெற்றது. அதற்க்கு அவரே ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து தற்போது கவுதம் மேனன் காட்சிகளும் நிறைவுபெற்றுவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
பயன்படுத்தும் கேமரா இதுதான்
தொடர்ந்து பல அப்டேட்ஸ் வெளிவரும் நிலையில், லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்தே வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் இப்படத்திற்காக என்ன கேமரா பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
RED கேமராவை வைத்து தான் லியோ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் திரையுலகில் அதிகம் பயன்படுத்தும் இந்த கேமரா இதற்க்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது.
பீஸ்ட் மற்றும் லியோ இரு திரைப்படத்திற்கு மனோஜ் பரமகம்சா தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
#LEO - V-Raptor XL Red Camera on board to shoot in 360⁰ with 4x speed of mocobot & monstro, 6K format shots & fire exposure scenes.. ? #BloodySweet Surreal Visuals loading.. ❤️?pic.twitter.com/yK2NcPNeCS
— VCD (@VCDtweets) March 5, 2023
நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கோபிநாத்.. வெளிவந்த வீடியோ