ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறார்.
அவர் யார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் அனிருத்தான். ஆம், அனிருத் தனது சிறு வயதில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.