தல அஜித்தின் படத்தை ஒரு முறை கூட ஒளிபரப்பு செய்யாத முன்னணி தொலைக்காட்சி.. ஒரு படத்தை கூட வாங்கவில்லையா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
தல அஜித்தின் படங்கள் திரையரங்கில் வெளியாகும் பொழுது, ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பு, அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் பொழுதும் இருக்கும்.
இப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டதால் தான், தற்போது வரை சன் டிவியில் ஒளிபரப்பான விஸ்வாசம் படத்தின் TRP ரேட்டிங்கை எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்தாலும் தோற்கடிக்க முடியவில்லை.
இப்படியொரு நிலை இருக்க, பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் இதுவரை தல அஜித்தின், ஒரு படம் கூட ஒளிபரப்பு செய்ததில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.
ஆம், இதுவரை தல அஜித்தின் ஒரு படத்தை கூட விஜய் தொலைக்காட்சி வாங்கியதே இல்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.