தளபதி68ல் இணைந்த பிரபல காமெடியன்.. யார் பாருங்க
விஜய்யின் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக வெளியாகலாம் என தகவல் பரவியது.
மேலும் டைட்டில் பற்றியும் சில வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என ஏஜிஎஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

கஞ்சா கருப்பு
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தளபதி 68 படத்தில் இணைந்து இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் கஞ்சா கருப்பு இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்.
கஞ்சா கருப்பு ஒரு படத்தை தயாரித்து அதில் மொத்த பணத்தையும் இழந்து தற்போது வாடகை வீட்டில் வறுமையில் கஷ்டப்படுவதாக சமீபத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அவருக்கு விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri