ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய குக் வித் கோமாளி பிரபலம், வெளியான ப்ரோமோ வீடியோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, பெரியளவிலான ரசிகர்கள் ரசிக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது.
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வந்துள்ளார்.
ஆம், தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் ஜீ திரை தொலைக்காட்சியில் Zee Thirai Premiere League என்ற ப்ரோமோவில் தான் அஸ்வின் நடித்துள்ளார்.