சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் இணைந்த இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள் - அட, இவர்களா
1972-ல் திரைக்கு வந்த படம் காசேதான் கடவுளடா. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா இப்படத்தில் நடித்து இருந்தனர்.
இப்படத்தை 49 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரீமேக் செய்கின்றனர். இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
இதில் மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி, பிரியா ஆனந்த் அனைவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ஏற்கனவே குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி நடிக்கவிருக்கிறார் என்று தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழும், காசேதான் கடவுளடா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில், இயக்குனர் மற்றும் ஹீரோவுடன், புகழ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..
