விஜய்யாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்.. இணையத்தில் வைரலான வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்குமுன் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போல் மாறிய வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..