விஜய்யின் பாடலுக்கு நடமாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னேரின் மகள்.. செம க்யூட் வீடியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த படம் மாஸ்டர். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், விஜய் டிவி தீனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதிலும், இப்படத்தில் இடம்பெற்று இருந்த வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது.
இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நடமாடி வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர். இப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆன பிறகும், வாத்தி கம்மிங் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள கிராஸ் குறையவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு, பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னேரின் மகள் நடமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில், விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..