பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர்- யாரு தெரியுமா?
பிக்பாஸ் 6
தமிழ் சின்னத்திரை மிகவும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
தொடர்ந்து 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து இப்போது 6வது சீசன் தொடங்கவுள்ளது, அந்நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வண்ணம் உள்ளன.
பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, சில வீட்டின் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. கமல்ஹாசனும் புரொமோவில் காட்டை வைத்து சில வசனங்கள் பேசுவார்.
போட்டியாளர்
இந்த பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகிறவர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர் அடிபடுகிறது, ஆனால் உண்மையில் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி அன்று தான் தெரியவரும்.
இந்த நிலையில் ஒரு பிரபலத்தின் பெயர் இந்த லிஸ்டில் அடிபடுகிறது, அவர் வேறுயாரும் இல்லை விஜய்யின் சுறா படத்தில் நான் நடந்தால் அதிரடி என்ற பாடலுக்கு மாஸ் நடனம் அமைத்த ராபர்ட் மாஸ்டர் 6வது சீசனில் பங்குகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம்