விஜய் முதல்வராக வரட்டுமே, ஒருத்தர் தான் இருக்கணுமா?... பிரபலம் ஓபன் டாக்
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்.
இவரது படம் ரிலீஸ் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும், ஆனால் இனி அதுபோல் இருக்காது என்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் தான்.
எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார் விஜய். கட்சி தொடங்கி அந்த வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார்.

நடன இயக்குனர்
சினிமாவை தாண்டி விஜய்யின் அரசியல் குறித்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி நடன இயக்குனரும், நடிகருமான பாபா பாஸ்கர் ஒரு பேட்டியில், தளபதி முதல்வரா வரட்டும், ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போம், எப்போதும் ஒருத்தர் தான் இருக்கணுமா என்ன?
எவ்ளோ நாள் தான் பாபா பாஸ்கரே டான்ஸ் மாஸ்டரா இருப்பான், அவனுக்கு பின்னாடி ஒருத்தர் வரணும்ல.
எல்லாமே ஒரு சுழற்சி தான், மக்களும் புதுசா தான் எதிர்ப்பார்க்கிறார்கள், பார்ப்போம் எல்லாம் இறைவன் அருள் என பேசியுள்ளார்.
