தனக்கு செட் ஆகாது என தெரிந்தும் அஜித் நடித்து தோல்வியடைந்த திரைப்படம்- ஓபனாக கூறிய இயக்குனர்
நடிகர் அஜித்
வருட ஆரம்பத்தில் துணிவு என்ற வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தார்.
அதன்பிறகு அடுத்த பட அறிவிப்பு வெளியாக 4 மாதங்கள் ஆனது, ஒருவழியாக அவரது பிறந்தநாள் மே 1ம் தேதி அறிவிப்பு வந்தது.
லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்க அஜித்தின் புதிய படம் தயாராக இருக்கிறது.
மற்றபடி படம் குறித்து இதுவரை வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
நடிகரின் தோல்வி படம்
ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அஜித்தை வைத்து லிங்குசாமி ஜி என்ற படத்தை இயக்கினார், இது அவருக்கு முதல் அரசியல் படமாக அமைந்தது, ஆனால் படத்திற்கு சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்தப் படத்தில் அஜித்துக்குப் பதிலாக முதலில் சித்தார்த்தை தான் செலக்ட் செய்திருந்தாராம் லிங்குசாமி. ஆனால், சித்தார்த் நடிக்க மறுத்துவிட்டதால் அஜித்திடம் சென்றுள்ளார்.
ஆனால் அஜித் அந்த கேரக்டர் பண்ணக்கூடாது என நினைத்து தான் லிங்குசாமி சென்றாராம், கடைசியில் அஜித் நடிப்பதாக உறுதியாகி இருக்கிறது.
ஜி படத்தில் கல்லூரி மாணவனாக அஜித் நடித்திருப்பார். கேரக்டர் பற்றி தெரிந்ததும் தனக்கு இப்படம் செட் ஆகாது என்று நினைத்து வேறு கதை இருக்கிறதா என கேட்டாராம்.
காரணம் படப்பிடிப்பிற்கு முந்தைய நாளில் தான் கதை கேட்டாராம் அஜித். அப்போது இயக்குனரிடமே இந்த படம் தனக்கு சரியாக வராது என ஓபனா கூறிவிட்டாராம்.
விஜய் டிவியின் இந்த முக்கிய சீரியல் நாயகிகளுக்கு டப் கொடுப்பது இவர்தானா?- வீடியோவுடன் இதோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
