தனுஷுக்கு வில்லனான முன்னணி இயக்குனர்.. நானே வருவேன் படத்தின் மாஸ் அப்டேட்
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட வருடங்கள் கழித்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் நானே வருவேன்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பின் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
மேலும், இப்படத்தின் First லுக் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று நானே வருவேன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவன் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். இதன்முலம், இப்படத்தை செல்வராகவன் இயக்கி, நடித்துள்ளார்.
போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும், தனுஷுக்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/g7wIELgWfK
— Kalaippuli S Thanu (@theVcreations) March 5, 2022