சூப்பர் சிங்கர் 11 சீசனில் நடுவராக இணைந்துள்ள பிரபல இயக்குனர்.. யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் 11
விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி.
இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி தான். இதில் பாடல் பாடி மக்களின் மனதை கவர்ந்த பலர் இப்போது வெள்ளித்திரையில் பாடல்கள் பாடி வருகிறார்கள்.
இப்போது பக்தி சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, விரைவில் இந்த சீசன் முடிவுக்கு வர உள்ளது.
கேப்டன்
விரைவில் சூப்பர் சிங்கர் 11 தொடங்கவுள்ளது, புத்தம்புது கான்செப்டுடன் ஒளிபரப்பாக உள்ள இந்த சீசனின் புரொமோ ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
டெல்டா தமிழ், கொங்கு தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என 4 கான்செப்டுகள், அதன் ஒவ்வொன்றிற்கும் ஒரு கேப்டன்.
அப்படி கொங்கு தமிழுக்கு அனுராதா ஸ்ரீராம், எங்கும் தமிழுக்கு உன்னிகிருஷ்ணன், சென்னை தமிழுக்கு தமன் மற்றும் டெல்டா தமிழுக்கு பிரபல இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர்.