தளபதி 66 படத்தின் இணைந்த மேலும் ஒரு இயக்குனர்.. யாருனு தெரியுமா
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
இப்படமே இன்னும் முடிவுக்கு வாராத நிலையில், தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 66 படம் குறித்து தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டது.
இப்படத்திற்காக நடிகர் விஜய் சுமார் ரூ. 120 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் கூட பேச்சு அடிப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் பிரபலமான, இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு வசனம் எழுத ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஏற்கனவே, வம்சி தமிழில் இயக்கிய ‘தோழா’ படத்துக்கும் ராஜு முருகன் வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri