சூர்யாவே கேட்டு அஜித்தின் பட காட்சியை வைத்த படம் எது தெரியுமா?- இயக்குனர் கூறிய தகவல்

Yathrika
in திரைப்படம்Report this article
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கங்குவா படம் வெளியாகி இருந்தது.
பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்த்தால் படு நஷ்டத்தை தான் சந்தித்தது, அதில் இருந்து படக்குழு வெளியே வர ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.
தற்போது சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
தெரியாத தகவல்
சிங்கம்புலி இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா நடிக்க கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் மாயாவி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
இந்த படத்தில் அஜித்தின் ஒரு பட காட்சியை திரையரங்கில் பார்த்து சூர்யா அமர்க்களம் செய்யும் ஒரு காட்சி இடம்பெறும்.
அந்த காட்சியில் அஜித்தின் படத்தை வைக்கலாம் என கூறியதே சூர்யா தான் என இயக்குனர் சிங்கம் புலி சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.