அஜித் 61 படம் இப்படி தான் இருக்கும்.. படப்பிடிப்பு முன்பே அப்டேட் கொடுத்த இயக்குனர்
அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இப்படத்தையும் எச். வினோத் இயக்கியிருந்தார்.
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இயக்குனர் எச். வினோத், நடிகர் அஜித்தை வைத்து மீண்டும் இயக்கவுள்ள 'அஜித் 61' படத்தை குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளாராம்.
இதில் அவர் கூறியதாவது " ஏ.கே 61 படத்தில் முக்கியமான பிரச்சையை பற்றி தான் பேசப்போகிறோம். இப்படத்தில் அஜித்தின் Strong Zone-ல் இருந்து எதிர்மறையான விஷயங்கள் இருக்கும் " என்று அவர் கூறியுள்ளாராம்.
வலிமை படமே இன்னும் வெளிவராத நிலையில், அஜித்தின் 61வது படம் குறித்து இயக்குனர் எச். வினோத் கொடுத்துள்ள இந்த அப்டேட், அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய புத்தாண்டு விருந்தாக அமைத்துள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri