நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனாவின் தந்தை காலமானார்.. ஆறுதல் தெரிவித்த முன்னணி நடிகர்
தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானவர் ரவீனா. இவர் ஐ படத்தில் பேசிய வசனத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
ரவீனாவின் அம்மாவும் திரையுலகில் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதே போல் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
சென்ற ஆண்டு வெளியான காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாகவும் ரவீனா அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் நடிகை ரவீனாவின் தந்தை இன்று காலமாகியுள்ளார் எனும் சோக செய்தி வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், 'உங்கள் தந்தையின் மறைவிற்கு என்னுடைய அஞ்சலி. ப்ளீஸ் தைரியமாக இறுங்கள். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்' என்று ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

Extremely sad to hear the passing of @raveena116’s Father,
— Vishal (@VishalKOfficial) August 31, 2021
Deepest Condolences, Pls Stay Strong, We are with You Always !!