நேருக்கு நேர் அஜித்துடன் மோதப்போகும் கே.ஜி.எப் பட நடிகர்.. AK 61ல் இவர் தான் வில்லன்..?
அஜித்தின் AK 61
நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து AK 61 படத்தையும் போனி கபூர் தான், தயாரிக்கிறார்.
பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கமிட்டாகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
அஜித்துக்கு வில்லனாகும் ஜான்
இந்நிலையில், AK 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் John Highkogon நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் John Highkogon இதற்கு முன் சார்பாட்டா பரம்பரை, கே.ஜி.எப் 1,2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.